அழகான மனைவி... அன்பான கணவன்! இரண்டு பேரும் செய்து வந்த பித்தலாட்டம்: அம்பலமான தகவல்

Report Print Santhan in இந்தியா
21364Shares

தமிழகத்தில் இளம் தம்பதியினர் தொழிபதிபர்கள் என கூறி செய்து வந்த மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாக கூறி, தங்களுக்கு வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் வேண்டுமென்று, ஈரோட்டிலுள்ள மூன்று வங்கிகளிள் விண்ணப்பங்களை வழங்கி கடன் பெறறிருந்தனர்.

இதையடுத்து இந்த தம்பதியினர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்று வட்டி கட்ட கால தாமதம் ஆகியதால், வங்கி நிர்வாகிகள் அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்துள்ளனர்.

ஆனால், அந்த முகவரியில் அவர்கள் இல்லை. பார்ப்பதற்கு தன்னை ஒரு அழகான ஒரு தொழிலதிபர் போன்று ராதிகா காட்டிக் கொண்டுள்ளார். அதே போன்று கார்த்திக்கும் நடந்து கொள்ள அதிகாரிகள் இதை நம்பியுள்ளனர்.

அந்த முகவரியில் அவர்க்ள் இல்லை என்றவுடன், வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் சோதனை செய்ததில் அதுவும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகிகள் போலி ஆவணங்கள் மூலம் சாமர்த்தியமாக கடன்களைப் பெற்று வங்கிகளையே ஏமாற்றி தலைமறைவான தம்பதிகள் புகார் அளிக்க, கோயமுத்தூரில் தலைமறைவாக இருந்த இந்த தம்பதியை பொலிசார் கைது செய்தனர்.

இந்த தம்பதியினர் இதுவரை தொழிலதிபர்கள் என கூறி 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இதைத் தவிர் வேறு ஏதேனும் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்களா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்