இந்தியாவில் திருமணமான 90 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மாதேஷ் (23). இவருக்கும் தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த சரஸ்வதி (20) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து சரஸ்வதி கணவருடன் அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் கணவருடன் ஒரே மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வராமல் மாயமானார்.
இதனால் சரஸ்வதியை மாதேஷ் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாதேஷ் நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை காணவில்லை என்று புகார் அளித்தார்.
அதன்பேரில் பொலிசார் சரஸ்வதியை தேடி வந்தனர்.
இதற்கிடையே கிணற்றில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அதை வெளியில் எடுத்தனர். விசாரணையில் அந்த பெண் சரஸ்வதி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.
அவர் உடலை பார்த்து கணவர் கதறி அழுதத்து பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.