நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவர்களின் தவறை சுட்டி காட்டியுள்ளார்.
கடந்த 2017ல் அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் கூறிய போதும் இன்னும் கட்சி தொடங்கவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த அது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவெடுக்க தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் கூட்டியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.
நான் பலமுறை எச்சரித்தும் என் பேச்சை சிலர் கேட்கவில்லை.
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன
மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்.
இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என பேசியுள்ளார்.
இதனிடையில் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.