மனைவிக்கு பதிலாக வேறு ஒரு பெண்! கொன்று விட்டு தம்பதி நடத்திய நாடகம்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா
1852Shares

தமிழகத்தை உலுக்கிய அம்மாசை என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மனைவி அம்மாசை. சொத்து தொடர்பாக தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர்.

இதையடுத்து சொத்து பிரச்சினை குறித்து வழக்கு தொடுப்பது தொடர்பாக, கோபாலபுரத்திலுள்ள வழக்கறிஞர் ராஜவேல் அலுவலகத்துக்கு கடந்த 2011ல் சென்றார்.

ஆனால் வீடு திரும்பவில்லை. இது குறித்து அம்மாசையின் மகள் சகுந்தலா தேவி புகார் அளித்தார். பொலிசார் விசாரிக்கையில், ராஜவேல் அலுவலகம் சென்ற அம்மாசையை கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது.

கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. ராஜவேல் மனைவி வழக்கறினர் மோகனா, ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். அவர் மீதான வழக்கை முடித்து வைக்க, மோகனா இறந்து விட்டதாக சான்றிதழ் கொடுக்க திட்டமிட்டனர்.

ராஜவேலு அலுவலகத்துக்கு, குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் அறிய வந்த அம்மாசையை கொன்று, மோகனா இறந்து விட்டதாக கூறி மருத்துவர் சான்றிதழ் பெற்றனர். மின்மயானத்தில் சடலத்தை எரித்து, மோகனா இறந்ததாக மாநகராட்சியில் சான்றிதழ் பெற்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக, ராஜவேலு, மோகனா, உடந்தையாக இருந்த பொன்ராஜ், டிரைவர் பழனிச்சாமி ஆகியோர், 2013ல் கைது செய்யப்பட்டு, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பொன்ராஜ் அப்ரூவராக மாறியதால், அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். இதனால் மற்ற மூவர் மீதும், கடந்த ஆறு ஆண்டாக விசாரணை நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், ராஜவேலு, மோகனா, பழனிச்சாமி ஆகிய 3 பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி வழக்கறிஞர் தம்பதி ராஜவேலு - மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, மேலும், அம்மாவாசையை கொல்ல ராஜவேலுவுக்கு உடந்தையாக இருந்த பழனிச்சாமி என்பவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்