நாளை உருவாகிறது புயல் - மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

Report Print Kavitha in இந்தியா
184Shares

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகின்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இப்புயலானது காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலானது நாளை மறுநாள் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது.

இந்நிலையில் புயல் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழையும், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிச.2ம் திகதி மற்றும் டிச.3ந்திகதியில் தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிமாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை நகர், புறநகரில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் டிசம்பர் 3ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்