ரஜினியின் அரசியல் அறிவிப்பு? கசிந்த ரகசிய தகவல்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இன்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அதில் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்று ரஜினிகாந்தின் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது

குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அதுவரை மக்கள் மன்றம் மூலம் நற்பணிகள் தொடரட்டும் என ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் தெரிவிப்பார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து களமிறங்க மாட்டார் என்றே அவரது தரப்பினரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்