மாமனார் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம்... மனைவிக்கு வந்த சந்தேகம்! நடுத்தெருவுக்கு கொண்டு வந்த விபரீத விளையாட்டு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதல் கணவனை நம்பி குடும்பம் நடத்த வந்த மனைவி நடுத்தெருவுக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தகாட்டூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரை மணிகண்டன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

திருமணம் ஆன சில மாதங்களிலே தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சமாதானம் அடைந்ததால், மணிகண்டன் மாமியார் வீட்டில் இருந்து சுமார் 30 சவரன் நகை வரதட்சனையாக பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு மணிகண்டன் எந்த ஒரு வேலைக்கு செல்லாமலும், வீட்டில் இருந்து வந்ததால், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன், தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு செல்லும் போதெல்லாம் மாமனாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணமல் போயுள்ளது.

இதனால் கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவன் மீதான சந்தேகம் அதிகரிக்கவே, தனது நகைகளை எடுத்து பார்த்த போது அசல் நகைகளுக்கு பதில் அனைத்தும் கவரிங் நகைகளாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக, கடந்த 2019-ஆம் ஆண்டு காதல் கணவனை பிரிந்த தமிழ்ச்செல்வி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் போது காதல் கணவன் மணிகண்டன், ஆன்லைன் ரம்மியில் தான் விட்ட பணத்தை பிடிப்பதற்காக தனது மனைவியின் நகைகளை விற்று விளையாடியதாகவும் அந்த பணத்தை பறிகொடுத்ததால், போலி நகைகளை மாற்றி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்போது பொலிசாரிடம், மணிகண்டன் பணம் நகையை 6 மாதத்தில் திருப்பி தருவதாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் சென்றதே தவிர நகைகள், பணம் வந்த பாடில்லை, அதுமட்டுமின்றி மணிகண்டன் தலைமறைவானதால், மணிகண்டனின் வீட்டிற்கு முன்னால் தெருவில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் தமிழ்ச் செல்வி ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்