தந்தை மற்றும் அக்கா கணவருடன் வெகுதூரம் பயணித்த இளம்பெண்! நடந்தேறிய பயங்கர சம்பவம்... கதறி அழுத குடும்பத்தார்

Report Print Raju Raju in இந்தியா
3870Shares

தமிழகத்தில் அக்காள் கணவருடன் இரயிலில் பயணித்த இளம்பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவருடைய மகள் மனிஷாஸ்ரீ (23). இவர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அக்காள் கணவர் அய்யனார் (34) மற்றும் தந்தை குருநாதன் ஆகியோருடன் சென்னை சென்றார்.

அங்கு கலந்தாய்வில் கலந்து கொண்டார். கலந்தாய்வில் அவருக்கு ஊரக மருத்துவ துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு இரயிலில் ஊருக்கு வந்தனர்.

இரயிலானது கோப்பையநாயக்கர்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷாஸ்ரீ படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக இரயிலில் இருந்து விழுந்ததாக தெரிகிறது. இதையறியாமல் குருநாதனும், அய்யனாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். சங்கரன்கோவிலுக்கு இரயில் வந்தவுடன் இறங்கும் போது, மனிஷாஸ்ரீ அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை தேடினர்.

உடனே அவர்கள் இதுகுறித்து இரயில்வே பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் தண்டவாள பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது தண்டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பரிதாபமாக இருந்தது.

மனிஷாஸ்ரீ சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You May Like This Video

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்