தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை என ரஜினிகாந்த் உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து தற்போது செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்.
தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும். அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம், கட்டாயம் என்பதால் கட்சி துவங்குகிறேன்.
கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒரு போதும் மாறப்போவதில்லை தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை.
கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை.
மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை.
தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன் என பேசினார்.