இன்னும் 3 மணிநேரத்தில் பாம்பனை கடக்கும் புரெவி புயல்

Report Print Fathima Fathima in இந்தியா
240Shares

பாம்பனுக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்னும் 3 மணி நேரத்தில் கடந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாம்பன் அருகே 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்