சீமான் நீதான் பெரிய கோழை...ரஜினி கோழையில்ல! புட்டு புட்டு வைத்து வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

Report Print Santhan in இந்தியா
4278Shares

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில், பிரபல திரைப்பட நடிகையான விஜயலட்சுமி சீமான் தான் பெரிய கோழை என்று பேசியுள்ளார்.

தமிழகத்தில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் வரும் 31-ஆம் திகதி தன்னுடைய கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ரஜினியை ஒரு கோழை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் பலரும் அவரை சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், திரைப்பட நடிகையான விஜயலட்சுமி, நேற்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாட்டு ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டிய சீமான் தான் ஒரு கோழை.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து அரசியல் செய்து வரும் சீமான் ரஜினியை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் என்ன வெளிநாட்டு பணத்தில் அரசியல் செய்கிறாரா? தன்னுடைய சொந்த பணத்தில் அரசியல் செய்கிறார்.

சீமான் கண்ணாடி முன் பார்த்தால் அவர்தான் ஒரு கோழை என்பது அவருக்கு புரிய வரும் என்று தொடர்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்