கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: 11 நாட்களுக்கு பின் விமானியின் உடல் மீட்பு

Report Print Arbin Arbin in இந்தியா
186Shares

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான மிக்-29 போர் விமானத்தின் விமானி மாயமான நிலையில், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து, ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து கடந்த மாதம் 26-ஆம் திகதி 2 விமானிகளுடன் பறந்து சென்ற மிக்-29 கே என்ற பயிற்சி விமானம் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக அந்த விமானத்தில் இருந்து ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் முதன்மை விமானியான நிஷாந்த்சிங் மாயமானார்.

அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணியில் 9 போர்க்கப்பல்கள், 14 விமானங்களை கடற்படை ஈடுபடுத்தியது.

இந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து, நேற்று ஒரு உடல் மீட்கப்பட்டது. அது விமானி நிஷாந்த் சிங் உடல் தான் என நம்பப்படுகிறது.

இருப்பினும் மரபணு பரிசோதனைக்கு பின்னர் தான் உறுதி செய்யப்படும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்