வீட்டிற்கு வந்த தோழிகளால் மனைவியை பறிகொடுத்து நிற்கும் கணவன்! அம்மா இல்லாமல் தவிக்கும் 2 குழந்தைகள்

Report Print Santhan in இந்தியா
987Shares

தமிழகத்தில் வீட்டிற்கு வந்த தோழிகளால் கணவன் தன் மனைவியை பற்கொடுத்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன்(32). மரவேலை செய்து வரும் இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி(26) என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நந்தினியின் தோழிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது பேசிக் கொண்ட போது, ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால், அதிகளவு சம்பாதிக்கலாம், என்று நந்தினியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட நந்தினி உடனடியாக, தன்னுடைய கணவரிடம் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.

ஆனால், அவரோ இது எல்லாம் ஒருமோசடியாக இருக்கும் இதில் முதலீடு செய்ய நான் பணம் தர மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்து போன நந்தினி நேற்று முன் தினம் இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நந்தினி இறந்ததை காலையில் தான் அவரது உறவினர்கள் பார்த்தனர். இதுகுறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்கு வந்த தோழிகள் கொடுத்த பண ஆசையால், ரூபன் தன் மனைவியையும், இரண்டு குழந்தைகள் தாயை இழந்தும் நிற்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்