இந்திய ஊடக நிறுவனமான ஏ.ஆர்.ஜி அவுட்லியர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி இன்று காலை மேற்கு இந்திய நகரமான மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13-வது நபராவார்.
"விசாரணையில் முழுமையான இணக்கம் இருந்தபோதிலும், நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி இன்று காலை அவரது வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்" என நிறுவனத்தின் முதன்மை செய்தி சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி அதன் ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ளது.
டி.ஆர்.பி மோசடி (TRP Scam) என அழைக்கப்படும் ஒரு வழக்கில், ஊடக கூட்டமைப்பு அதன் சேனல்களுக்கான பார்வையாளர்களைக் கையாளுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடயவியல் தணிக்கையாளர்கள் மற்றும் BARC அல்லது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட 140 சாட்சிகளை இந்த ஆவணம் பெயரிடுகிறது.
ஹன்சா ரிசர்ச் அதிகாரி நிதின் தியோகர் அளித்த புகாரைத் தொடர்ந்து மும்பை காவல்துறை அக்டோபர் 6-ம் திகதி முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணைகளைத் தொடங்கியது.
வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை திடடமிடப்பட்டிருந்த நிலையில், காஞ்சந்தானி மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சிவசுப்பிரமணியன் சுந்தரம் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை ஒரு அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தங்களது தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஜாமீன் கோரி அவசர விசாரணையை கோருவதாக நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தொடர்பில்லாத வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதற்காக ரிபப்ளிக் மீடியா நெட்ஒர்க்கின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.