சித்ரா தற்கொலை வழக்கில் திரட்டப்பட்டுள்ள முக்கிய ஆதாரங்கள்! சக நடிகர்களிடம் கிடைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
3934Shares

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்