தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்தி திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்! அதிரவைக்கும் பின்னணி

Report Print Santhan in இந்தியா
1139Shares

தமிழகத்தில் தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் வேல் தேவர். இவருக்கு, சுடலை ராஜ் மற்றும் இசக்கி முத்து என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும், பழைய பேட்டை பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். சுடலை ராஜின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரர் இசக்கி முத்து மனைவி மற்றும் மகள் செய்து கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுடலை ராஜின் மூத்த மகன் காளிராஜ் என்பவருக்கும் இசக்கி முத்துவின் மகள் மேகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

தங்கை உறவு முறை கொண்ட மேகலாவை இசக்கி ராஜின் மூத்த மகன் காளிராஜ் காதலிப்பதை தெரிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதானல் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காளிராஜும், மேகலாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் நெல்லை பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அருகே வசித்து வந்துள்ளனர். கேபிள் டிவி நிறுவனத்தில் பணி செய்து வந்த காளிராஜ் பணியை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 10-ஆம் திகதி இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிசார், காளிராஜுன் மனைவி மேகலாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். அந்த கும்பல் மேகலாவை கொலை செய்யவும் திட்டம் தீட்டியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் பாளையங்கோட்டை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர் .

இந்நிலையில் அரசு பெண்கள் காப்பகத்தில் தனியாக இருந்த மேகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காப்பகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமான சத்தம் கேட்டதை தொடர்ந்து காப்பாக அறையைப் பார்த்தபோது தூக்கில் தொங்கிய படி மேலாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்