இந்திய விவசாயிகளுக்காகப் போராடும் 6-ஆம் வகுப்பு மாணவி!

Report Print Gokulan Gokulan in இந்தியா
106Shares

குர்சிம்ரத் கவுர், 11 வயதே ஆகும் வட இந்திய மாநிலமான பஞ்சாபிலிருந்து வந்த ஒரு விவசாயியின் மகள் ஆவார்.

டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த 6-ஆம் வகுப்பு மாணவி போராட்டங்களுக்கு மத்தியில் தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்.

அவர் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சேர்ந்து பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். "நாங்கள் எங்கள் உரிமைக்காககப் போராடுகிரோம். நான் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன். படிப்பு முக்கியம் தான், அதேபோல் இந்தப் போராட்டமும் மிக முக்கியம். இந்த புதிய சட்டங்களை தடை செய்த பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம்" எனக் கூருகிறார் இந்த இளம் போராளி.

இந்தியாவில் பல வாரங்களாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருது.

விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவொரு தீர்மானத்திற்கும் வழிவகுக்கவில்லை.

வேளாண் துறையை தனியாருக்கு வீட்டுக்கொடுக்கும் புதிய சட்டங்கள் தடையற்ற சந்தைக்கு பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசாங்கம் கூறுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்