மாப்பிள்ளைக்கு எவ்வளவு வரதட்சணை தர போவதாக சொன்னோம்? சித்ரா பெற்றோர் அளித்த வாக்குமூலம்... 4 மணி நேர விசாரணை

Report Print Raju Raju in இந்தியா
1620Shares

சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களிலேயே உயிரிழந்ததால் ஆர்டிஓ, விசாரணையை கையில் எடுத்துள்ள நிலையில் சில முக்கிய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சித்ராவுக்கு பதிவு திருமணம் நடந்து 2 மாதங்களிலேயே அவர் உயிரிழந்ததால் விசாரணையை ஆர்டிஓ கையில் எடுத்துள்ளது.

இதை தொடர்ந்து வருவாய் கோட்டாச்சரியர் இன்று சித்ராவின் தாயார், தந்தை, சகோதரரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணையானது 4 மணி நேரம் நடைபெற்றது.

விசாரணையின் போது சித்ரா திருமணத்துக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் வரதட்சணையாக தர இருந்ததாக சித்ரா பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தாலும், ஊரறிய திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து வரதட்சணை விடயத்தை சித்ராவின் பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

இதோடு சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என அவரின் தாய் கூறியதோடு அதற்கான விபரங்களையும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசியது என்ன மற்றும் வாக்குவாதம் நடந்தது உண்மைதானா போன்ற கேள்விகள் சித்ராவின் அம்மா கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்