அக்காவை கணவருடன் சேர்ந்து துடி துடிக்க கொலை செய்த தங்கை! விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Santhan in இந்தியா
5107Shares

தமிழகத்தில் அக்காவை துடி துடிக்க கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை பொலிசார் கையும், களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் இருக்கும் மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில்,

குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தனது வாயில் மதுபானத்தை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும் அதற்கு காரணம் தனது அக்கா தெய்வானை என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதில், அதிகாலையில், தெய்வானை வீட்டிற்கு சென்று பார்த்த போது, தெய்வானை கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகம் அடைந்த பொலிசார் லட்சுமியிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த சில ஆண்டுகளாக துபாயில் கணவருடன் தங்கி வேலைபார்த்து வந்த தெய்வானை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து திரும்பியதும், லட்சுமியின் கணவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததால், அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தெய்வானை ரமேஷின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு, குடிப்பழக்கம் உள்ள ரமேசுக்கு சொத்து எதையும் தரவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அக்கா தெய்வானையின் தயவில் வாழ்ந்துவந்த நிலையில் திடீரென வெளியேற்றப்பட்டதால் லட்சுமியும், அவரது கணவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக் கொள்ள, ரமேஷ் கத்தியால் தெய்வானையை சரமாரியாக குத்தி கொடூரமாக குத்தியுள்ளார்.

இதில் தெய்வானை சம்பவ இடத்திலே துடி துடிக்க இறந்துள்ளார். விசாரணைக்கு பின் லட்சுமியை கைது செய்த பொலிசார், தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேசை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்