தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம்

Report Print Fathima Fathima in இந்தியா
240Shares

இந்தியாவில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி அரசாங்க உதவியுடன் திருமணங்கள் நடந்தது.

இந்நிகழ்வில் 63 திருமணங்கள் நடந்த நிலையில், தாயும்- மகளும் தங்களது துணையுடன் இணைந்தனர்.

53 வயதான பெலி தேவி என்பவரும், அவரது கடைசி மகளுமான இந்து என்பவரும் தங்களுடைய துணையை திருமணம் செயது கொண்டனர்.

பெலி தேவியின் கணவரான ஹரிஹர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார், இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது, இந்நிலையில் ஹரிஹர்ரின் சகோதரரை பெலி தேவி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இந்து கூறுகையில், என் அம்மாவும், சித்தப்பாவும் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர், தற்போது அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் எனவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்