நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

Report Print Basu in இந்தியா
414Shares

2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் 2021-ல் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து (234) தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ‘விவசாயி’ சின்னத்தைப் பொதுச் சின்னமாக வழங்கி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ‘விவசாயி’சின்னம் ஒதுக்கப்பட்டது.

தற்போது அதே சின்னத்தையே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்