நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்! நினைவிருக்கட்டும்: கமல்ஹாசன் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோ

Report Print Basu in இந்தியா
160Shares

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தான் விருது வாங்கும் பழைய உணர்ச்சிபூர்வமான வீடியோவை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்கினார்.

மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்லை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்ல என்ற பதிவுடன் எம்.ஜி.ஆரிடம் தான் விருது வாங்கும் பழைய வீடியோவை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்