மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்கினார்.
மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என்று பேட்டியளித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு இடத்திலும் எங்கள் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.