தமிழகத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர்கள் சுரேஷ்- கற்பகவள்ளி தம்பதி. சுரேஷுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் தமது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார்.
இதில் வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிசார்,
சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தற்போது வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளி சுரேஷிற்கு 10,000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.