சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் சிக்கியது எப்படி? விசாரணையில் நடந்தது என்ன? வெளியான முழு விபரம்

Report Print Santhan in இந்தியா
4229Shares

சீரியல் நடிகையான சித்ரா தற்கொலை விவகாரத்தில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பொலிசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா, சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் மரண செய்தி, திரையுலகில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் தற்கொலைக்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதனால் இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக பொலிசார், 6 நாளும் பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணயை மேற்கொண்டு வந்தனர்.

அவர் சொன்ன அனைத்தையும் பொலிசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தன் மகள் சாவுக்கு அவன் தான் காரணம் என்பதை சித்ராவின் அம்மா, 6 நாட்களுக்கும் முன்பும் சொன்னார், நேற்று ஆர்டிஓ விசாரணை முடிந்தும் சொன்னார்.

இருப்பினும், ஹேம்நாத் விஷயத்தில் பொலிசார் அவசரப்படாமல், 6 நாட்களுக்கு பிறகுதான், சித்ராவின் தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இப்போதைக்கு 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். ஹேம்நாத் நேற்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடந்த நிலையில், இன்று ஹேமந்த்தின் பெற்றோரிடமும் விசாரணை நடந்தது.

இதனிடையே, ஹேம்நாத்திடம் பொலிசார் விசாரணையின் போது என்ன கேட்டனர் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதில், நீங்கள் ஏன் சித்ரா தங்கியிருந்த அறையை விட்டு சென்றீர்கள் என்று கேட்க, அதற்கு, சித்ரா குளிக்க செல்வதாக கூறியதால் அங்கிருந்து வெளியேறியதாக முதலில் சொல்லி உள்ளார்.

அதன் பின், காரில் உள்ள ஹேண்ட்பேக்கை எடுக்க சொன்னதால், வெளியே சென்றதாக சொல்லி உள்ளார். பிறகு காரில் சில ஆவணங்களை சித்ரா எடுத்து வர சொன்னதால் வெளியே சென்றதாக கூறியுள்ளார். இப்படி மாத்தி மாத்தி கூறியது தான், ஹேமந்த் மீதான சந்தேகம் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது.

இதற்கு நடுவில் சித்ராவின் அம்மாவும், என் பொண்ணை சாவடிச்சிட்டான் என்று அவர் மீது குற்றஞ்சாட்டவும், சந்தேகம் வலுவாகி வந்துள்ளது.

இதற்கு பிறகுதான், துணை கமிஷனர் தீபாசத்யன் நேரடியாகவே வந்து ஹேம்நாத்திடம் விசாரணையை நடத்தி உள்ளார்.. ஷூட்டிங்கில் முடிந்து காரில் வரும்போதே, நெருக்கமான காட்சிகள் நடித்தது தொடர்பாக தகராறு வந்துள்ளது. ஹோட்டல் அறைக்கு சென்ற பிறகும் அது தொடர்ந்துள்ளது.

அப்போது ஹேம்நாத் இனி இந்த மாதிரி சீன்களில் நடிக்க வேண்டாம் என்று சொல்லவும், சித்ரா அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர், ஹேம்நாத் அறையை விட்டு வெளியே செல்ல, நான் உங்களையே நம்பி இருக்கேன்என்று சித்ரா சொன்னதற்கு, அவரை திட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஒருபுறம் ஹேம்நாத்தின் நடவடிக்கை மற்றொருபுறம் தன் அம்மாவுடன் சித்ராவுக்கும் மனக்கசப்பு இருந்து வந்ததால் அளவுக்கு அதிகமான மனஉளைச்சலுக்கு சித்ரா இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, திருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கும் சித்ரா கடன் வாங்கியதாகக் தெரிகிறது.

இதற்கு பிறகு ஊரடங்கில் சிக்கி கொண்டு, மறுபடியும் ஷூட்டிங் தொடங்கவும், ஓய்வின்றி சித்ரா உழைத்துள்ளார். மேலும், தனது திருமணத்தை பிரம்மாண்டமாகத நடத்தவும், சினிமா பிரபலங்களை அழைக்க வேண்டும் என்று சித்ரா திட்டமிட்டுள்ளார்.. ஆனால், அதற்கு ஹேமந்த எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.




மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்