கமல்-ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய கட்சி தொடங்கும் முக்கிய பிரபலம்!

Report Print Basu in இந்தியா
347Shares

கமலஹாசன், ரஜினியைத் தொடர்ந்து விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியத் திரைப்பட விழா, அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில்

2019ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்கிற தமிழ் திரைப்படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்தது.

இதற்கான புதுவை அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

தானும் எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் இருக்கிறது, எனது கட்சியின் பெயர் ‘புதிய பாதை’ என பார்த்திபன் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்