காதல் திருமணம் செய்த தம்பதியினர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

Report Print Irumporai in இந்தியா
676Shares

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது 25). திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சார்ந்தவர் கரிசூழ்ந்தாள் என்ற கஸ்தூரி (வயது 24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பறக்கை பைத்துல்மாநகர் பகுதியில் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், மகவைகுண்டம் கேமரா பொருத்தும் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்க்கையில், இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்