நாட்டை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு! 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

Report Print Basu in இந்தியா
661Shares

கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த 1992ல் கோட்டயத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா (21) பிணமாக கிடந்தார்.

இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அதாவது பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார்.

இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து, தாமசும், செபியும், உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து தாமஸ், செபி மற்றும் உடந்தையாக இருந்ததாக பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில் ஆகியோரை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

வழக்கின் விசாரணை திருவனந்தபுரம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இதற்கிடையே, பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று (டிசம்பவர் 23) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

இதன்படி, கொலை நடந்து, 28 ஆண்டுகளுக்கு பின் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்