உயிரிழந்த கணவன்! தனியாக வசித்து வந்த பெண்... நள்ளிரவில் வீட்டின் பின்பக்கமாக வந்த நபர்களால் நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
455Shares

தமிழ்நாட்டில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜானகி . சண்முகம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் ஜானகி தனியாக வசித்து வந்தார்.

இவரது மகன் பாரிராஜன். அரசு மருத்துவரான இவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஜானகியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர்.

பின்னர் ஜானகி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை ஜானகி வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுப்பதற்காக பாரிராஜன் வந்தார். அவரது கார் ஓட்டுனர் ஜான்சன், ஜானகியை அழைத்துள்ளார்.

நீண்ட நேரமாக அழைத்தும் வீட்டுக்குள் இருந்து ஜானகி வெளியில் வராத காரணத்தால் பின்பக்க வழியாக சென்று பார்த்துள்ளார். அப்போது ஜானகி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த தகவலை பாரிராஜனிடம் தெரிவித்தார்.

அவரும் ஓடி வந்து தனது தாய் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து கதறி அழுதார்.

புகாரின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்