51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்த 29 வயது இளைஞன்! குற்றத்தை ஒப்புக் கொண்டான்

Report Print Santhan in இந்தியா
298Shares

கேரளாவில் 51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 29 வயது மதிக்கத்தக்க கணவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் Sakha Kumari(51). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த Arun (29) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன இரண்டே மாதத்தில் Sakha Kumari வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், பொலிசார் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Arun சொத்துக்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது Arun பண ஆதாயத்திற்காகவே அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கடந்த ஞாயிற்றுக் கிழமை இவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ தினத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர், Sakha Kumari-ஐ படுக்கையறையில் வைத்து அடித்து சித்ரவதை செய்து அதன் பின், அவரை அறைக்கு இழுத்துச் சென்று உடல் மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார் அருண்.

இது குறித்து சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை என்றால், இறந்து கிடந்த Sakha Kumari-யின் கை, தலை மற்றும் முகத்தில் காயம் இருப்பதும், வீட்டின் சுவிட்ச் போர்டில் இருந்து மின்சாரம் கொண்ட கம்பியை மனைவி மீது பாய்ச்சியுள்ளார் என்பது தெரியவந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வட்டாரம் கூறுகையில், அருணுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து மக்கள் அவதூறாக பேசுவதால் மனம் வருந்தியதாக அருண் தெரிவித்தார்.

தனக்கு நிதி பிரச்சினைகள் இருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் மனைவியிடம் கேட்டுள்ளார். அதன் பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, மனைவியை கொலை செய்ய முன் கூட்டியே திட்டமிட்டு மின்சாரத்தை பாய்ச்சி கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்திருக்கலாம், மனைவியை கொன்றுவிட்டு அருண் தூங்க சென்றிருக்கலாம், அதன் பின் மறு நாள் அதிகாலை 6 மணியளவில் பக்கத்து வீட்டார்களிடன் அருண் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அருண் உடலிலும் லேசான காயங்கள் இருப்பதாக கூறினர். இறந்த மனைவியின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அருண் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்