அரசியலுக்கு வரவில்லை..! பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்: மிகுந்த வருத்ததுடன் வெளியிட்ட அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
1267Shares

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளார்.

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, அர்ஜுனமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்றிருந்த நிலையில் படக் குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானது.

ரஜினிக்கு கொரோனா இல்லை என உறுதியான போதிலும், இரத்தக் கொதிப்பில் தொடர்ந்த ஏற்றத் தாழ்வு இருந்ததால், 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

தற்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்ள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்