நடிகர் ரஜினி அரசியலை விட்டு விலகு அவருடைய மகள்கள் தான் முக்கிய காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் கடைசி கட்சி குறித்தும், அரசியல் குறித்தும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தார்.
இதனால் எப்போது 31-ஆம் திகதி வரும், ரஜினியின் கட்சி பெயர், சின்னம் எப்படியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
ஆனால் ரஜினியோ சில நிமிடங்களுக்கு முன்னர், அரசியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
ஏனெனில் ரஜினிக்கு எந்த ஒரு மன அழுத்தம் ஏற்படக்கூடாது. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் எந்த நோயேனும் ஈஸியாக பரவிவிடும்.
அப்படி பரவிவிட்டால் பெரிய ஆபத்தை தந்துவிடும். இந்த சமயத்தில், அரசியல் குறித்து அதிகமாக யோசிப்பதால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.
அதனால் இப்போதைக்கு அரசியல் வேண்டாமே, கட்சிப்பணிகளுக்காக கூட வெளியே எங்கேயும் போக வேண்டாம் என்று ரஜினியின் மகள்கள் கெஞ்சி கூறியுள்ளனர்.
மகள்கள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு பின்னரே ரஜினி இப்படி ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் ரஜினியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.