அரசியலுக்கு வர போவதில்லை என அறிவித்த ரஜினிகாந்த்! அவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க போகும் கமல்ஹாசன்

Report Print Raju Raju in இந்தியா
380Shares

தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்த ரஜினிகாந்த் திடீரென நேற்று தனது உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்தார்.

அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இது தொடர்பில் நேற்று பேசிய கமல்ஹாசன், ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ''சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன். திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் பொதுவானது. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்