ஹீட்டரை தொட்டு அலறிய மனைவி... ஓடி வந்து உதவ முயன்ற கணவர்: துயரத்தில் முடிந்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
717Shares

சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் தனது மனைவி சசிகலா என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்துவரும் விஜயகுமாரும் அவரது மனைவியும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காகச் செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை இயக்கியபோது சற்றும் எதிர்பாராத விதமாக, சசிகலா மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த விஜயகுமார்-சசிகலா தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்