அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் சன்-டிவி! திமுக எம்.பி கடும் எதிர்ப்பு

Report Print Basu in இந்தியா
249Shares

சன்-டிவியில் அதிமுக விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு தரமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை விளக்கும் அதிமுக விளம்பரம் சன்-டிவியில் ஒளிபரப்பப்பட்டது திமுக-வினரிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைதொடர்ந்து, சன்-டிவியில் அதிமுக விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு தரமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம்.

ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை.

அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்