திருமணமான 3 மாதத்தில் தமிழகத்தை சேர்ந்த மனைவியை கொன்றது ஏன்? வடஇந்திய வாலிபரின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
1083Shares

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கொலை செய்த அவர் கணவரான வட இந்திய வாலிபர் பொலிசில் சரணடைந்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை (21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதன்பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சுரண்டை கோட்டை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இ்ங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 24ம் திகதி இரவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோகிந்தர், பூங்கோதையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இதையடுத்து வீட்டில் கிடந்த பூங்கோதை சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி முன்னிலையில் ஜோகிந்தர் நேற்று சரண் அடைந்தார். பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ஜோகிந்தரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி பூங்கோதை அடிக்கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கி விடுவார்.

இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். மேலும் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசா மாநிலத்துக்கு வர மறுத்து விட்டார்.

இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்