அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி: சோகத்தில் ரசிகர் திடீர் மரணம்

Report Print Fathima Fathima in இந்தியா
505Shares

தமிழகத்தில் ரஜினியின் அரசியல் முடிவால் சோகத்தில் இருந்த ரஜினி ரசிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தின் பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறார்.

அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்தார்.

இதனால் கடும் சோகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்த ராஜ்குமார், அதிர்ச்சியில் மரணமடைந்து விட்டார்.

இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்