இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்..! பரபரப்பில் படையெடுக்கும் மக்கள்

Report Print Kavitha in இந்தியா
486Shares

குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டாக தெரவிக்கப்படுகின்றது.

சமீப நாட்களாக இது போன்ற மர்ம தூண் கிட்டத்தட்ட உலகெங்கிலும் 30 நகரங்களில் தோன்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இதுபோன்ற மர்ம தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும்.

இதனால் பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.

இதனை தொடர்ந்து வெளிவந்த தகவலில் இத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது எனவும் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாக அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் கூறும் கூறியுள்ளார்.

இதனால் பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு நீடிக்கவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்