சீமானின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவது ஏன்? வெளிவரும் தகவல்

Report Print Santhan in இந்தியா
11106Shares

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், இப்போதில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்டன.

இந்த முறையாவது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் மிஞ்சியது.

இந்த செய்தி பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று கூறி, ஒட்டு மொத்த மீடியாவை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

தமிழரா, திராவிடரா என மோதிப் பார்த்துவிட வேண்டும். இந்தமுறை, தி.மு.க-வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும்தான் சண்டை என்று கூற, அது டுவிட்டரில் டிரண்டிங்கில் வந்து நின்றது.

நாம் தமிழர் கட்சி முன்பு இருப்பது போல் இருந்தால், இது ஏதோ ஒரு பேச்சு என்று நினைத்துவிடலாம், ஆனால் இப்போது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு என்று வாக்குவங்கி உள்ளது. ஒரு குறிப்பிட்ட வாக்குகளை அந்த கட்சியால் பிரிக்க முடியும்.

திருவொற்றியூரில் போட்டியிட முடிவு செய்திருந்த சீமான், திடீரென ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக அறிவித்ததற்கு காரணம், ஒரு விளம்பர சூழ்ச்சி தான் என்று கூறப்படுகிறது.

அதாவது ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால், ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும், அதுமட்டுமின்றி திராவிடமா? தமிழ்த் தேசியமா? என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என சீமான் நினைக்கிராறாம்.

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் ஒரு தொகுதியில் மட்டுமல்லாமல், மற்ற 233 தொகுதிகளிலும் தி.மு.க-வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

இப்படிச் செய்வதன் மூலம், இந்தத் தேர்தலில் இல்லாவிட்டாலும், எதிர்காலத்திலாவது அது, தனக்கு நிச்சயம் பலனளிக்கும் என்பதே சீமானின் திட்டமாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்