கர்ப்பமான 16 வயது சிறுமி! வசமாக சிக்கிய மீனா என்ற பெண்... விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிடும் தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா
4688Shares

தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் 16 வயது சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தன்னுடைய மகள் மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாக கூறினார்.

இதையடுத்து பொலிசார் சிறுமியிடம் விசாரித்த போது மீனா என்பவர் மூலம் அறிமுகமான ஜேசுராஜ் (42) என்பவர் தன்னிடம் தவறாக நடந்ததாகக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார்.

அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது பகீர் தகவல்கள் வெளியானது.

பொலிசார் கூறுகையில், 16 வயது சிறுமியின் அம்மாவுக்கும், மீனா (40) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருக்கிறது.

அதனால் சிறுமியின் வீட்டுக்கு மீனா அடிக்கடி செல்வதுண்டு. அப்போது சிறுமியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மீனாவின் கணவர் குப்பைகளைப் பொறுக்கி, சென்னையில் பழைய இரும்புக்கடை நடத்திவரும் ஜேசுராஜிடம் விற்பதுண்டு. அந்தவகையில் ஜேசுராஜுக்கும் மீனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் நெருங்கி பழகிய சூழலில் மீனா மூலம் ஜேசுராஜுக்கு 16 வயது சிறுமி அறிமுகமாகியிருக்கிறார். அப்போது சிறுமியை மீனா மூலம் கட்டாயப்படுத்திய ஜேசுராஜ் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாது. குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை சிறுமிக்கு நடந்திருக்கிறது. இந்தநிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அது குறித்து சிறுமியிடம் அவரின் அம்மா விசாரித்தபோதுதான், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா எங்களிடம் புகாரளித்தார்.

அதன்பேரில் ஜேசுராஜ், அவருக்கு உதவிய மீனா என்கிற குப்பம்மாள் ஆகிய இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

You May Like This

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்