பகீர் கிளப்பிய பேஸ்புக் பதிவு: கணவரை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்

Report Print Arbin Arbin in இந்தியா
228Shares

இந்திய தலைநகர் டெல்லியில் தூக்கத்தில் இருந்த கணவரை சமையல் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் அவரது மனைவி.

தெற்கு டெல்லியின் சதர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிராக் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரேணுகா.

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே 36 வயதான சிராக் ஷர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தவெள்ளத்தில் சிராகின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது, மனைவி ரேணுகா மயக்கமடைந்த நிலையில் படுக்கையில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில், கொலை தொடர்பில் பதிவொன்றை போட்ட பின்னரே ரேணுகா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்பதிவை பார்த்து அதிர்ந்துபோன நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரேணுகாவை காப்பாற்றும் நோக்கில் தொடர்பி கொள்ள முயன்றும் முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து அவரின் வீட்டு உரிமையாளருக்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து பர்த்த போது குடியிருப்பு உள்ளுக்குள் பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிராக் கொல்லப்பட்ட நிலையிலும், ரேணுகா மயக்கமடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்குள்ளும் குழந்தை இல்லாத விஷயமாக சண்டை வந்துள்ளது.

அப்போது கணவர் சிராக், மனைவி ரேணுகாவை கண்டபடி திட்டி விட்டு தூங்க சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆவேசமடைந்த ரேணுகா சமையலறையில் இருந்த ஒரு கத்தியை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த கணவரை சராமாரியாக குத்தியுள்ளார். இதனால் சிராக் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்று மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ரேணுகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் இருவருக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்