உனக்காக எதுவும் செய்வேன் என கணவர் குறித்து உருகிய பிரபல கோடீஸ்வர இளம்பெண்! திடீரென விவாகரத்து செய்ததால் குழம்பிய மக்கள்

Report Print Raju Raju in இந்தியா
358Shares

அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணும் நடிகையுமான Zoe Kravitz தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Zoe Kravitzன் சொத்து மதிப்பு $8 மில்லியன் ஆகும். இவரும், நடிகர் Karl Glusmanம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் தனது முதலாமாண்டு திருமண நாள் அன்று Zoe ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், ஐ லவ் யூ, உனக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன், நான் இறக்கும் வரையில் எல்லாவற்றையும் உங்களுக்காக தருவேன் என கணவர் குறித்து உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை வெளியிட்ட சில மாதங்களில் தற்போது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக Zoe அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தம்பதிகள் ஏன் விவாகரத்து செய்யவுள்ளனர் மற்றும் அதற்கு காரணம் என்ன என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்