தினமும் இரவு தாமதமாக வந்த கணவன்! ஆத்திரத்தில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்: பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
432Shares

இந்தியாவில் கணவன் தினமும் இரவு தமாதமாக வந்ததால், கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் வசித்து வரும் தம்பதி அரவிந்த் அஹிர்வார்-ஷிவ்குமாரி. கூலிவேலை செய்து வருவதால், அரவிந்த் அஹிர்வார் தினமும் வேலை முடிந்து அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டு இரவில் தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால் மனைவியான ஷிவ்குமாரி கணவரிடம் இது குறித்து சண்டை போட்டு வந்துள்ளார். தினமும் இரவு தாமதமாக வந்தால் என்ன செய்வது என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

இருவருக்கும் இதன் காரணமாக தொடர்ந்து சண்டை வந்தபடி இருந்துள்ளது. அவ்வப்போது அருகில் இருக்கும் உறவினர்கள் இவர்களின் சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்தி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அரவிந்த் அஹிர்வார் தொடர்ந்து இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் சம்பவ தினத்தன்று ஷிவ்குமாரிக்கு கடும் கோபம் வந்துள்ளது. கணவர் இப்படி நாம் சொல்வதை கேட்கவே மறுக்கிறாரே என்ன செய்வது என்று, அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, சமயலறைக்கு சென்று எண்ணெய்யை கொதிக்க வைத்து, கணவன் முகத்தின் மேலே ஊத்தியுள்ளார்.

வலியால் அரவிந்த் அலறி துடிக்க, இவரின் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருப்பவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போது, தினமும் கணவர் இரவு தாமதமாக வந்ததால், நான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாக அவர் மீது எண்ணெய்யை காய்ச்சி ஊத்திவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொலிசார் கணவர் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்