விதிமுறைகளை மீறினால் திரையரங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ! அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

Report Print Nalini in இந்தியா
201Shares

திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் விதிகளை மீறினால் திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும என அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் வாழ்வாதாரங்களை கணக்கில் கொண்டு தமிழக அரசு பல தளர்வுகளை கொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்களுடன் படங்கள் திரையிட அனுமதி கொடுத்தது. இதனையடுத்து, சினிமாத்துறையினர் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், மருத்துவக்குழுவினர் அறிவுரையில் பேரில்தான் தமிழகத்தில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி நடந்தால் திரையரங்குகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்