தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in இந்தியா
38505Shares

தமிழத்தில் கோவிலுக்குள் வைத்து கணவரை இழந்த பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்றிரவு 9 மணி அளவில் நாகை காமராஜர் நகர் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு உறங்க அந்த பெண் சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியே வந்த வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை வாயை பொத்தி அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். பின்னர், கோவில் வளாகத்துக்குள் வைத்து இரண்டு பேரும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் , அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்ப்டட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

இது குறித்த புகாரில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அருண் ராஜ், ஆனந்த் ஆகிய இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளிக்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்று அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்