இதை குடித்தால் கொரோனா செத்து விடும்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு

Report Print Basu in இந்தியா
346Shares

கொரோனா குறித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 8,27,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,228 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவகை கொரோனா பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளது.

அதேசமயம், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்தது.

இந்நிலையில், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து, செத்து விடும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்