துக்ளக் தர்பார் படத்தின் டீஸரில் சீமானை சித்தரிப்பது போல் இடம்பெற்ற கட்சி குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வெளியானது.
இதில், சீமானை சித்தரிப்பது போல் ராசிமான் என்ற பெயர் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை கிழிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், அப்படத்தில் என்னை சித்தரிப்பது போல் காட்சி இடம்பெற்றிருந்தால், நான் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டேன் என்பதை காட்டுகிறது. இதனால் நான் பெருமை அடைகிறேன் என கூறினார்.
இந்நிலையில், அப்படத்தில் ராசிமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் இது குறித்து விளக்கமளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல>> pic.twitter.com/wNSqUmncIW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 13, 2021
அதில், நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல என தெரிவித்துள்ளார்.