காட்டில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் உடல்! 2வது மனைவியை கணவன் கொன்றது அம்பலம்.. முதல் மனைவியின் கோர முகம்

Report Print Raju Raju in இந்தியா
674Shares

இந்தியாவில் காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண் கொலை வழக்கில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இளம்பெண்ணின் உடல் தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் கொல்லப்பட்ட அப்பெண்ணின் பெயர் சுபியா பிரவீன் என தெரியவந்தது.

அவரின் கணவர் பிலாலிடம் பொலிசார் விசாரிக்க நினைத்த நிலையில் அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரை பொலிசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பிலாலின் முதல் மனைவி பெயர் ஷபோ ஆகும். அவரின் இரண்டாவது மனைவி தான் சுபியா.

பிலால் தன்னை கொடுமைப்படுத்துவதாக சுபியா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அவரை முன்னர் கைது செய்தனர்.

பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் சுபியா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அதே போல சுபியாவுக்கும், ஷபோவுக்கும் ஒத்து போகாத நிலையில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து ஷபோவும், பிலாலும் சேர்ந்து சுபியாவை கொல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அவரை அடித்து கொன்று தலையை தனியாக வெட்டி எடுத்து உடலை காட்டில் போட்டுவிட்டு தலையை தனியாக வீசியது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்