திருமணமான 1 மாதத்தில் கணவர் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா
548Shares

இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தின் கலாம்பலத்தை சேர்ந்தவர் ஆதிரா.

இளம்பெண்ணான இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணவர் வீட்டில் கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் ஆதிரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் கழுத்து மற்றும் மணிக்கட்டில் கத்தியால் அறுத்த காயங்கள் இருந்தது.

ஆதிராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆதிராவின் பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தார் கூறியுள்ளார்.

கழிப்பறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இறந்து கிடந்தார்.

அவர் சடலம் அருகிலேயே கத்தி இருந்தது, இது தற்கொலையாக இருந்தாலும் எதற்காக ஆதிரா இந்த முடிவை எடுத்தார் என தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்