ஒரு தாயின் ஏக்கம்! பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் பேரறிவாளன் விடுதலை தொடர்பில் பேசிய கமல்ஹாசன்! அற்புதம்மாள் நெகிழ்ச்சி

Report Print Raju Raju in இந்தியா
1354Shares

பிக்பாஸ் இறுதி நிகழ்வில் பேரறிவாளன் குறித்து கமல்ஹாசன் பேசியது தொடர்பில் அற்புதம்மாள் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸின் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசும் போது ஒரு கையெழுத்திற்க்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தாயார் என பேரறிவாளன் விடுதலை தொடர்பில் பேசினார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை...

ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை...

பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்